முகப்பு
ஸ்தல புராணம்
கோவில் புராணம்
ஊர் நிர்வாகம்
சமுதாய விரிவாக்கம்
பள்ளிகள்
பண்டிகைகள்
புகைப்படங்கள்
தொடர்பு கொள்ள
   
 

ஸ்ரீ சிவசுப்ரமணியர் துணை
எல்லாம் வல்ல இறைவன் துணை
முக்காலம் உணர்ந்த முருகப்பெருமான் துணை
 

அஞ்சுமுகம் தோன்றில்
ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென
வேல்தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின்
இருகாலுந் தோன்றும் .
முருகா என்றோதுவார் முன்.

நெய்யும் தொழிலில் நிகரற்று விளங்கும் சிறப்பு மிக்க ஊர் தான் நாம் குடியிருக்கும் குருசாமிபாளையம். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியாக நமது ஊர் விளங்குகிறது. எந்த துறையானாலும் முதலில் நிற்போம் என்று தலை நிமிர்ந்து நிற்கும் பண்புடையோரே முதலியார். அத்தகைய செங்குந்த முதலியார் வாழும் பகுதியே குருசாமிபாளையம். "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நமது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து நிலைநாட்டிய கோவிலே அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் கோவிலாகும். நமது கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். 1935-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் நாள் (யுவ வருடம் வைகாசி மாதம் 20-ம் நாள் ) குடமுழுக்கு செய்யப்பட்டது. இக்கோவில், கற்ப கிரகம், அர்த்த மண்டபம்,மகாமண்டபம், மயில்குறடு, பலிபீடம், ,கொடிக்கம்பம், திருமதில், கோபுர வாசல், காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தீபஸ்தம்பம் முதலான பகுதிகளுடன் காணப்படுகிறது. இவைகள் பழங்காலத்து சிற்ப கலையின் சிறப்பை நாம் உணரும் வண்ணம் அமைந்துள்ளது.

 
புகைப் படங்கள்
Click for larger image        
 
 
     
 
Copyright © 2011 Sri Siva Subramaniya Temple, Gurusai , All rights reserved This site designed and maintained by Kathir