|
|
|
ஊர் நிர்வாகம் |
|
எழுகரை மகா நாட்டிற்கு (திருச்செங்கோடு) உட்பட்ட ஐந்தாவது நாடான ராசிபுரம் நாட்டின் மேலூர் கிராமம் தான் குருசாமிபாளையம். இவ்வூர் நிர்வாகம் செங்குந்தர் தலைமையின் கீழ் 24 காரியக்காரர்களுடன் செம்மையாக செயல்பட்டு வருகிறது.
தற்போதைய நிர்வாகத்தினர்
ஊர் பெரியதனக்காரர் : பண்டிதம் M . கேசவமூர்த்தி முதலியார், அவர்கள்.
ஊர் காரியக்காரர்கள்
1. மேற்கத்தி V . அருள்பிரகாஷ் ,
2. செம்புலி L . லோகநாதன் ,
3. நாட்டமங்கலம் S . ராமலிங்கம் ,
4. தம்பம்பட்டி A . ஞானசேகரன் ,
5. ஊமையம்பட்டி K . முத்துசாமி ,
6. கந்தமுதலி T .P .S . கார்த்திகேயன் ,
7. பட்டறை K .S . பத்மநாபன் ,
8. மெத்தைவீடு A . சண்முகசுந்தரம் ,
9. நாட்டாண்மை N .A .V .N . ராமதாஸ் ,
10. சிவப்பு நூல் S . ஆறுமுகம் ,
11. கோமாளி P .மாதேஸ்வரன் ,
12. கலங்கானி S . தேவராஜன் ,
13. மொகாசி A . சோமசுந்தரம் ,
14. சுண்டி M . மாதேஸ்வரன் ,
15. கண்ணாடி K . பரமசிவம் ,
16. ஓலைப்பட்டி. சுந்தரம் ,
17. மொ. கு. சீனிவாசன் ,
18. கடுவன் N . S . குணசேகரன் ,
19. மலை. ஜனார்த்தனன் ,
20. கெங்கரா. குட்டி . M . மணி ,
21. திடுமல் M . தனசேகரன் ,
22. சங்கோதி S . சத்யமூர்த்தி ,
23. முறுக்கு S . பன்னீர்செல்வம் ,
24. மல்லூர் V . அர்த்தனாரி,
25. பூவரசு S . வடிவேல் ,
மேற்படி நிர்வாகிகள் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அவர்களின் நிர்வாகத்தின் கீழ் அருள்மிகு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயமும்,அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் ஆலயமும் நிர்வகிக்கப்படுகிறது.
இதன் தொடர்புடைய காவல் தெய்வமான ஸ்ரீபரஞ்சோதி முனியப்பன் கோவிலும்,அருள்மிகு ஸ்ரீமாயம் பிள்ளையார் கோவிலும் நிர்வகிக்கப்படுகிறது.மேலும் அதன் அருகிலுள்ள கருப்பனார் கோவிலும், அருள்மிகு ஸ்ரீபகவதி அம்மன் கோவிலும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது.
மேலும் நமது ஊரிலுள்ள ஆறு பிள்ளையார் கோயில்கள் உட்பட எல்லா கோவில்களும் நமது செங்குந்தர் சமுதாய பெருமக்களின் நிர்வாகத்தில் உள்ளன.
நமது ஊரிலுள்ள ஆன்மீக உள்ளம் கொண்டவர்கள் ஆண்டுதோறும் மார்கழி மாதம் எல்லா நாட்களிலும் அதிகாலையில் தேவாரத் திருப்புகழ் பஜனை சிறப்பாக செய்து வருகின்றனர்.இந்த பஜனைக் குழுவினர் ஆண்டுதோறும் திருச்செங்கோடு படி விழாவிலும், திருப்பதியில் நடைபெறும் படி விழாவிலும், சேலம் குமரகிரியில் நடைபெறும் படி விழாவிலும் கலந்து கொண்டு நமது ஊருக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
மேலும் நமது ஊரில் தோப்புக் காட்டில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதக ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கனகசபை K.V.அங்கமுத்து முதலியாரால் நிறுவப்பட்டு அவரது சந்ததியினரால் நாள்தோறும் சிறப்பாக பூஜை நடத்தப்பட்ட்டு வருகிறது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் நமது ஊர் நாட்டாமங்கலத்தார் பங்காளிகளின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் மிகச்சிறப்பாகவும் உயர்வுடனும் காணப்படுகிறது.
மேலும் நமது ஊரில் குரு ஈஸ்வரர் ஆலயம் சிறப்பாக அமைந்துள்ளது. இக்கோயில் கொங்குநாட்டுக் கவுண்டர் சமுதாயத்தாரால் பராமரிக்கப்பட்டு சிறப்பு புஜைகள் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் நமது செங்குந்தப் பெருமக்களின் ஆன்மீகம் தலைத்தோங்கி, நமது வாழ்க்கையும், நெசவுத்தொழிலையும், கல்வியையும், வியாபாரத்தையும் முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். |
|
|
|
|