முகப்பு
ஸ்தல புராணம்
கோவில் புராணம்
ஊர் நிர்வாகம்
சமுதாய விரிவாக்கம்
பள்ளிகள்
பண்டிகைகள்
புகைப்படங்கள்
தொடர்பு கொள்ள
   
 
 
சமுதாய விரிவாக்கம்
 

பலநூறு ஆண்டுகளாக இவ்வூர் செங்குந்த பெருமக்களின் தொழில்,செய்யுந் தொழில்களில் சிறந்து விளங்கும் நெய்யுந்தொழிலே ஆகும்! பரம்பரைப் பரம்பரையாக நமது ஊர் செங்குந்த பெருமக்கள் நெய்யுந் தொழிலிலேயே ஈடுபட்டு வந்துள்ளனர்.எனவே நெய்யுந் தொழிலுக்குத் தேவையான பாவு தோய்வதற்கு பாவடி அமைத்துள்ளனர்.காலப் போக்கில் பாவுதோயும் இடம் அதிகம் தேவைப்பட்டதால் 1930-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் தங்கம்மாள் முத்துக்கருப்பஞ் செட்டியார்(பச்சி செட்டியார்)வகையினரிடமிருந்து 7.74 ஏக்கர் நிலத்தை(சர்வே எண்.36,37) கிரையமாகப் பெற்று அந்த நிலத்தின் கிழக்குபுறம் புதிதாக வீடுகள் அமைத்தனர்.மீதமுள்ள மேற்குபுற நிலத்தில் மற்றும் ஒரு பாவடி அமைத்து பாவு தோய்த்து வந்தனர்.

காலப்போக்கில் கைத்தறித் தொழில் விசைத்தறிக்கு மாறியதால் பாவுதோயும் முறை மாறிவிட்டது.எனவே ஊருக்குச்சொந்தமான கிழக்கு பாவடியில் செங்குந்த பெருமக்களின் குடும்ப விழாக்களை நடத்துவதற்கு ஏதுவாக செங்குந்தர் சமுதாயக் கூடம் என்ற கட்டிடம் கட்டுவதற்கு 1996-ம் ஆண்டு அன்றைய பெரியதனக்காரர் நாட்டாமங்கலம் N.S.தர்மலிங்கம் முதலியார் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

செங்குந்த பெருமக்களின் பெரு முயற்சியால் கட்டிடம் கட்டப்பட்டு 17.02.2006-ம் ஆண்டு அப்போதைய பெரியதனக்காரர் திரு.A.S.இராமசாமி முதலியார் தலைமையில் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.செங்குந்த பெருமக்களின் குடும்ப விழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. செங்குந்தர் சமுதாயக் கூடமானது இரண்டு தளங்களையும்,14-அறைகளையும் தன்னகத்தே கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சமுதாயக் கூடத்தை நிர்வகிக்க தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அவர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய நிர்வாகக் குழுவினர்
திரு.கரிச்சி. M.கேசவ மூர்த்தி அவர்கள் ,தலைவர் ,
திரு .R.சண்முகம் அவர்கள்.துணைத்தலைவர் ,
திரு.G.V.சண்முகசுந்தரம் அவர்கள்.செயலாளர்,
திரு. M.A. அர்த்தனாரி அவர்கள் இணைச் செயலாளர்,
திரு. V. கார்த்திகேயன் அவர்கள் பொருளாளர்.

நிர்வாக உறுப்பினர்கள்
திரு. K. அம்பாயிரம் அவர்கள் .
திரு. K. தங்கமணி அவர்கள் .
திரு. K. ஆறுமுகம் அவர்கள்,
திரு. K. ராமலிங்கம் அவர்கள்.
திரு. N. அழகேசன் அவர்கள்.
திரு. A. மாரிமுத்து அவர்கள்.
திரு. S. மாதேஸ்வரன் அவர்கள்.

ஊர் விரிவாக்கம் :- காலப்போக்கில் மக்கள் குடியிருப்பு பகுதி அதிகம் தேவைப்பட்டது. எனவே தோப்புக்காடு பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலம் வாங்கி குடியிருப்பு நிலங்களாகப் பிரித்து, வீடுகள் கட்டி குடியேறினர். அதன் பின்னர் பிள்ளாநல்லூர் பகுதியில் இராமலிங்கநகர் உருவானது. நமது செங்குந்த பெருமக்கள் அங்கு குடியிருந்து தொழில் செய்து வருகிறார்கள்.

நெசவுத் தொழிலும் கூட்டுறவுத் துறையும்
செய்யும் தொழிலில் சிறந்த நெய்யும் தொழிலில் ஈடுபட்ட நமது ஊர்ப்பொதுமக்கள் துவக்க காலத்தில் சேலம் குகை கூட்டுறவு சங்கத்தில் சுமார் 90 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சேலம் சென்று கூட்டுறவு சங்கத்திலிருந்து நூல் வாங்கி வர இயலவில்லை.எனவே இவ்வூரைச் சேர்ந்த மணியம் திரு.K.S.மாரிமுத்து முதலியார் அவர்கள் மற்றும் செங்கல் தி.ரு.பழனியப்ப முதலியார் அவர்கள் ஆகியோர் சேலம் சென்று நூல்களைப் பெற்றுவந்து இங்குள்ள உறுப்பினர்களுக்கு கொடுத்துவந்தனர். அத்துடன் இங்கு உற்பத்தியாகும் ஜவுளியை சேலத்திற்கு கொண்டு சென்றனர்.

சேலம் குகை கூட்டுறவு சங்கத்திலிருந்து நூல்களைப் பெற்று வந்து இங்கு கொடுப்பதும் இங்கு உற்பத்தியாகும் ஜவுளியை சேலம் குகைக்கு கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டனர். எனவே 28.3.1947.ம் ஆண்டு தியாகி திரு.K.S.காளியப்ப முதலியார் அவர்கள் முயற்சியால் இவ்வூரில் ஒரு நெசவாளர் கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் S.844 குருசாமிபாளையம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச்சங்கம் என்ற பெயரில் சிறப்பாக நடந்து வருகிறது. மேலும் இச்சங்கம் வெள்ளி விழா, பொன் விழாக்களையும் கண்டுள்ளது. குருசாமி பாளையம் சொசைட்டி வேட்டி என்றால் மாநில அளவில் புகழ்பெற்று பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்று விளங்குகிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்புவரை வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் ஜவுளி சந்தையில், மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், இங்கு தயாரான வேட்டிகளை வாங்கி செல்வது வழக்கமாக இருந்தது.1972 -ம் ஆண்டு இச்சங்கத்தின் தலைவர் திரு.G.A. செங்கோடன் அவர்கள் தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அது சமயம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.S.மாதவன் அவர்கள் வெள்ளி விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் 1962- ம் ஆண்டு கரிச்சி. திரு K.A.பழனியப்ப முதிலியார் அவர்கள் முயற்சியால் குருசாமிபாளையம்.S.1463,முருகன் கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கம் தோற்றுவிக்கபட்டு நாளது வரை செம்மையாகச் செயல்பட்டு வருகிறது.

விசைத்தறிக்காக.TH.89 பாலாஜி கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் விசைத்தறி கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சங்கம் விசைத்தறி உரிமையாளர்களை உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

 
 
 
     
 
Copyright © 2011 Sri Siva Subramaniya Temple, Gurusai , All rights reserved This site designed and maintained by Kathir